"பாலம்" கல்யாணசுந்தரம் அய்யா குறித்த சில குறிப்புக்கள்!
ஒவ்வொருவருக்கும்
பணம் மூன்று வழிகளில் மட்டுமே கிடைக்கும் . மூதாதையர் இடமிருந்து வருவது, சுய உழைப்பு, பிறர் கொடுப்பது - என்ற இந்த மூன்று வழிகளிலும் வந்த
பணத்தை கல்யாணசுந்தரம் எப்படி பயன்படுத்தினார் என்பதை தெரிந்துகொள்வோம்!
- ஒரு கல்லூரியில் மாத சம்பளம் இருபதாயிரம் பெற்றுக் கொண்டு முப்பத்தைந்து ஆண்டுகள் பணிபுரிந்த போதிலும் அனைத்தையும் ஏழை மக்களுக்காய் செலவிட்டு தமது சொந்த செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தார்! .இவ்வாறு முப்பத்தைந்து ஆண்டு கால சம்பளம் - முப்பது லட்ச ரூபாய் முழுவதையுமே ஏழைகளுக்கு கொடுத்து வரலாறு படைத்தார்!
- உலகில் எந்த நாட்டை சேர்ந்த்த அரசு ஊழியர்களோ தனியார் நிறுவன ஊழியர்களோ இவ்வாறு செய்தது இல்லை என்பதால், அமெரிக்காவில் "ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்(Man of the Millennium)" என்ற விருதுக்கு தேர்ந்து எடுக்க பட்டு 6 .5 மில்லியன் டாலர் பரிசாக பெற்றார்! (முப்பது கோடி ரூபாய் ) அந்த பணம் முழுவதையும் ஏழை குழந்தைகளுக்கே வழங்கினார்!
- தன்னுடைய பங்காக குடும்பத்திலிருந்து கிடைத்த சொத்து ஐம்பது லட்ச ரூபாயையும் ஏழை மக்களுக்கு அளித்து விட்டார்!
- ஏழைகளின் துயரை நேரிடையாக அறிந்து கொள்ள ஏழு ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார்!
- இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தம் உடல் உறுப்புக்களை தானமாக மருத்துவ கல்லூரிக்கு எழுதி வைத்து விட்டார்!
- வாழ் நாள் முழுவதும் ஒரு செண்டு நிலமோ, ஓலை குடிசையோ, ஒரு சல்லி காசோ வைத்து கொள்ளாமல் தனது திருமண வாழ்க்கையை யும் தியாகம் செய்தவர் !
- ஐந்தாவது ஊதிய குழுவின் விடுபட்ட ஊதியத்தையும் (ரூபாய் பத்து லட்சத்தை) ஏழைகளுக்கு அளித்தார்!
- ஆறாவது ஊதிய குழுவின் ஐந்து லட்சத்தை ஏழை குழந்தைகளை கல்விக்காக எழுதி வைத்துவிட்டார்
கோடிக்கணக்கில் அள்ளி கொடுத்த இவர் ஏழைகளுக்கு கிட்டாத உணவையோ - உடைகளையோ - இருப்பிடத்தயோ விரும்புவதில்லை எனபது குறிப்பிடத்தக்கது!
"பாலம்" கல்யாணசுந்தரம் அய்யாவின் கொள்கைகள்!
- என்றும் இன்பமுடன் இனிதாய் வாழ எதன் மீதும் பேராசை கொள்ளாது இருப்போம்..!
- பத்தில் ஒன்றை தானம் செய்வோம்..!
- தினமும் ஒரு உயிருக்கு நன்மை செய்வோம்..!
credits to: Mari Muthu
1 Komentar untuk ""பாலம்" கல்யாணசுந்தரம் அய்யா - சில குறிப்புக்கள்..!"
அய்யா வளமுடன் வாழ்க அன்புடன் தூத்துக்குடி 9791780068-------www.onetamilnews.com உங்களது சாதனைகளை எங்களது இணையதளத்தில் படிக்கவும் email-onetamilnews@gmail.com