பாலம் கல்யாணசுந்தரம் - http://ta.wikipedia.org/s/2mr0

பாலம் கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஆகத்து 1953) நூலகரும், சமூக சேவகரும் ஆவார். பாலம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார். தனது 35-ஆண்டு கால நூலகப் பணியில் தான் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்து உள்ளார்.[1]. ஏழைகளுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.



வாழ்க்கைச் சுருக்கம்


கல்யாணசுந்தரம் திருநெல்வேலி, மேலக்கரிவலக்குளம் என்ற ஊரில் 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர். திருமணமாகாதவர்.[2] செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பிஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் அவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் தமிழ் மொழி மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் அதிலே பிடிவாதமாக இருந்தார். பின்னர் கருமுத்து தியாகராஜ செட்டியார் பணம் கொடுத்துப் படிக்க உதவினார்[3]. 1963ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது இந்திய சீனப் போரின் போது சவகர்லால் நேருவின் வானொலிப் பேச்சைக் கேட்டு தேசியப் பாதுகாப்பு நிதிக்காக எட்டரைப் பவுன் மைனர் தங்கச் சங்கிலியை காமராசரிடம் கொடுத்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் பணியாற்றி 1998 இல் ஓய்வு பெற்றார்.

தொண்டு நிறுவனம்


இவர் பாலம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் சேவை செய்து வருகிறார்.[4]

சிறப்புக்கள்


  • இந்திய அரசின் ‘இந்தியாவின் சிறந்த நூலகர் விருது’[5]
  • கல்வியறிவில்லாத ஏழை மக்களுக்கு 30 கோடி கொடுத்துள்ளார் [6]
  • சுபாஷ் கலியன் இயக்கியத்தில் வெளியான "பாலம் கல்யாணசுந்தரம்" பற்றிய ஆவணப்படம், 2012 ஆண்டு நடைபெற்ற மூன்றாவது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலுக்குத் தேர்வானது[7].
0 Komentar untuk "பாலம் கல்யாணசுந்தரம் - http://ta.wikipedia.org/s/2mr0"

Back To Top